கும்மிடிப்பூண்டி,ஏப்14-
கொரோனா வைரஸ் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இந்நிலையில்,பொதுமக்களை அந்த நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக பல்வேறு நாடுகளும்,மத்திய,மாநில அரசுகளும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்,மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,பல்வேறு அமைப்புகளும் நல்ல மனம் படைத்தவர்களும் மனிதாபிமானத்துடன்
பொது மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை தங்களால் இயன்றதை செய்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம், செங்கரை ஊராட்சியில் உள்ள தம்பிநாயுடுபாளையத்தில் வசித்துவரும் இருளர் இன மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்,குடும்ப அட்டை இல்லாதவர்கள் என
200 குடும்பங்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பத்து கிலோ அரிசி,மளிகை சாமான்கள்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் முக கவசம், கபநீர் குடிநீர் ஆகியவற்றை
ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமிவேதகிரி வழங்கினார்.நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி தலைமை தாங்கினார்.வருவாய் ஆய்வாளர் யுகேந்தர்,கிராம நிர்வாக அதிகாரி ரகு,ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார், துணைத்தலைவர் எலிசபெத் வெங்கட்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும்,முக கவசம் கபநீர் குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.மேலும்,தனித்திரு! விழித்திரு!வீட்டில் இரு!சமூதாய இடைவெளியை கடைப்பிடி! என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். முடிவில்,ஊராட்சி செயலர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.