அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுவாயல் கிராமத்தில் கபசுர குடிநீர்
" alt="" aria-hidden="true" />

கும்மிடிப்பூண்டி,ஏப்14-

 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுவாயல் கிராமத்தில் வசித்து வரும் 500 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் வில்லியர் காலனியில் வசித்து வரும் 20 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி,காய்கறி,முகக்கவசம் 

 உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பொன்ராஜா உத்தரவின்பேரில் பொதுக்குழு உறுப்பினர் புதுவாயல் இ.சரவணன் புதுவயல் கிராமத்தில் கபசுரக் குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கும் வில்லியர் காலனிக்கும் வழங்கினார்.

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் வீடுதேடி வந்து அவரிடம் கபசுர குடிநீர் வாங்கிச்சென்றனர்.

மேலும்,சைக்கிளில் கபசுரக் குடிநீர் வைத்துக் கொண்டு வீடு,வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். விழித்திரு! தனித்திரு! வீட்டில் இரு! சமுதாய இடைவெளியை கடைபிடி! என பொதுமக்களுக்கு கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Popular posts
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
தம்பிநாயுடுபாளையத்தில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி வழங்கினார்.
Image
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
Image
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளருக்கு மதியஉணவு வழங்கிய மயிலை பகுதி அதிமுக தலைவர் கே.நரேஷ்குமார்
Image